
ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ மேற்குப்பகுதியில் உள்ள Driftwood அவென்யூ பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடந்து சென்ற இளைஞன் ஒருவன் மீது துப்பாக்கியால் சுட்ட குறித்த சிறுவன் மீண்டும் துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
இருப்பினும் துப்பாக்கிச் சூட்டு காயத்திற்கு உள்ளன குறித்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். மேலும் அங்கிருந்து S.A. .380 வகையான கை துப்பாக்கி ஒன்றையும், பல துப்பாக்கிச் சன்னங்களும் இருந்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சிறுவன் சட்டத்தின் பிரகாரம் குறைந்த வயதெல்லையை கொண்டவர் என்பதால் 5 வெவ்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் சென்ற சிவப்பு நிற Honda Civic வாகனத்தை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு துப்பாக்கிச் சூட்டை அடுத்து குறித்த வாகனத்தை ஜேன் வீதியில் பார்த்ததாகவும் பொலிஸாருக்கு சாட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
