
அந்தவகையில், சினிமாத்துறையில் பல பிரபலங்கள் மண்ணுலகை விட்டு மறைந்திருக்கிறார்கள்.
இவ்வாறு இயற்கை மரணம் அடைந்தவர்கள். அதே வேளையில் சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்ததுண்டு. அந்த வகையில் இந்தாண்டு என்னென்ன நடந்தது என பார்க்கலாம்..
ஜனவரி 27 – பழம் பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
பெப்ரவரி 24 – நடிகை ஸ்ரீ தேவி துபாயில் காலமானார்.
ஏப்ரல் 25 – பழம் பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்.
மே 10 – சிவாஜி முதல் விக்ரம் வரை பல படங்களில் நடித்த நீலு இயற்கை எய்தினார்.
மே 15 – எழுத்தாளர், இயக்குனர், வசன கர்த்தா பாலகுமாரன் காலமானார்.
ஆகஸ்ட் 2 – ஆயுத பூஜை, ரெட்ட ஜடை வயது படங்களை இயக்கிய சி. சிவக்குமார் என்பவர் காலமானார்.
ஆகஸ்ட் 7 – கலைஞர் கருணாநிதி வயது மூப்பின் காரணாமாக மருத்துவமனையில் மரணமடைந்தார்.
செம்படம்பர் 5 – பல குரல் மன்னன் என்ற சிறப்பு பெற்ற நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமானார்.

செப்டம்பர் 5 – நடிகர் கோவை செந்தில் காலமானார்.
செப்டம்பர் 6 – காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்.
செப்டம்பர் 17 – நடிகை நிலானியின் கணவர் லலித் தற்கொலை செய்துகொண்டார்.
செப்டம்பர் 17 – ஹேட்ண்சம் வில்லன் கேப்டன் ராஜ் மரணம்
நவம்பர் 4 – மெட்டில் ஒலி சீரியல் நடிகர் விஜய ராஜ் காலமானார்.
நவம்பர் 24 – நடிகரும் அரசியல் பிரமுகருமான அம்பரீஷ் காலமானார்.
நவம்பர் 29 – இளம் நடிகை ரியாமிகா படவாய்ப்பில்லாததால் தற்கொலை செய்துகொண்டார்.
நவம்பர் 30 – இயக்குனர் ராபர்ட் காலமானார்.
டிசம்பர் 27 – சினிமா, நாடக நடிகர் சீனு மோகன் காலமானார்.
டிசம்பர் 30 – பிரபல இயக்குநர் மிருணாள் சென் வயது மூப்பின் காரணமாக காலமானார். (இன்று)
