இதுகுறித்து சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதாவது:
சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரம் பூச்சி தடுப்பு துறையின் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மண்டலங்களில் பெரிய நீர்வழிபாதைகளில் கொசுப்புழு அடர்த்தியாக உள்ள இடங்களை ஆய்வு செய்து தலைமையிடத்திற்கு வாராந்திர அறிக்கை அளிக்கப்பட்டுவருகிறது.
அதன் அடிப்படையில் 3300 பூச்சி தடுப்பு பணியாளர்களின் மூலம் 587 கைத்தெளிப்பான்கள், 15 விசை தெளிப்பான்கள், 23 சிறியரக புகைபரப்பும் இயந்திரங்கள், 312 புகைபரப்பும் இயந்திரங்கள் மற்றும் 39 வாகனத்தில் பொருத்தப்பட்ட புகைபரப்பும் இயந்திரங்கள் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரம் பூச்சி தடுப்பு துறையின் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ளவும் கொசுப்புழு அடர்த்தியை துல்லியமாக கணக்கிடவும் வலைதள (றுநb க்ஷயளநன) முறையில் புதிய வழிமுறை சோதனை அடிப்படையில் கையாளப்பட்டு வருகிறது.
இம்முறையில் அடிப்படை நீர்வழிபாதைகளில் வளரும் கொசுப்புழு அடர்த்தியை உயர் துல்லிய கையடக்க சாதனம் மூலம் துல்லியமாக கணக்கிட்டு உடனுக்குடன் நேரலையாக தெரிந்துகொள்ள தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இம்முறையில் கொசுப்புழு அடர்த்தியை கண்டறிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக அமையும் என சோதனை ஓட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வலைதள அடிப்படை முறையில் கொசுப்புழு அடர்த்தியின் அளவை பலதரப்பட்ட பருவநிலைகேற்ப துல்லியமாக கணக்கிட்டு, அதன் விவரங்களை பதிவு செய்து தேவையான இடங்களில் கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது இதனால் கொசுத்தொல்லை குறைவதாலும், கொசுக்களின் தாக்கத்தை குறித்த முந்தைய அறிக்கைகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கும் வசதி இருப்பதாலும் கொசுப்புழு உற்பத்தி மிக துல்லியமாக முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்த இயலும்.
மேற்சொன்ன என்ற மென்பொருள் உருவாக்கம் செய்து கொசுப்புழு அடர்த்தியை நேரடியாக கண்டறிந்து (சுநயட கூiஅந ஐஅயபந) தலைமையத்திற்கு உடனுக்குடன் தகவல் அளிக்கவும், இத்தகவலை உரிய அலுவலர்களுக்கு தெரிவித்து கொசுப்புழுக்களை உடனுக்குடன் கட்டுப்படுத்த இயலும்.
களப்பணி உதவியாளர் கொசு புழு அடர்த்தி ஆய்வு மேற்கொண்ட பின் அங்கு பணிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் குறைந்தது 2 கைதெளிப்பான்களுடன் கொசு புழு நாசினி கொண்டு கொசு புழு ஒழிப்பு பணியிலும், 4 முதல் 8 பணியாளர்கள் நீர்வழிபாதையில் உள்ள மிதக்கும் குப்பைகள் மற்றும் ஆகாய தாமரை அகற்றும் பணியிலும் ஈடுபடுவார்கள். மேலும் மண்டலம் 1 - 15 வரையில் உள்ள 234 கிலோ மீட்டர் நீர்வழிபாதையில் கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த 15 மேற்பார்வையாளரின் மேற்பார்வையில் 59 எண்ணிக்கையில் கைதெளிப்பான்கள் மற்றும் 125 பணியாளர்களை கொண்டு ஆகாயத்தாமரை மற்றும் மிதக்கும் குப்பைகளை அகற்றி வருகின்றனர். மேற்கூறிய பணிகள் திட்ட மிட்ட வார அட்டவனைப்படி நடைபெறும் இவ்வாறு தொடர்ந்து செய்வதால் நீர்வழி பாதைகளில் உள்ள கொசுபுழுவின் அடர்த்தி தொடர்ந்து கண்கானிக்கப்பட்டு கட்டு படுத்தப்படும்.
இத்தொழில்நுட்பத்தை வரும் காலங்களில், சிறிய கால்வாய்கள், குளங்கள் மற்றும் மழைநீர் வடிகால்வாய்களிலும் பயன்படுத்தப்பட்டு, கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
