கிண்ணியா குட்டிக்கராச் ப்தூல் ஆங்கில பாடசாலை தடம்பதித்து ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டும் 2018 ஆண்டுக்கான மாணவ,மாணவிகளின் பரிசளிப்பு விழாவும், கலைநிகழ்சிகளும் கடந்த 15 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3:30 மணியளவில் தி/கிண்ணியா மத்திய கல்லூரி
(தேசிய பாடசாலையின் ) அப்துல் மஜீத் மண்டபத்தில் ப்துல் பாடசாலையின் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.றாஸிக் , திருமதி ஏ.ஆர்.சியானா,இப் பாடசாலையின் ஆசிரியைகள் ஆகியோரின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக, கிண்ணியா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.எம்.மசூத்
மற்றும் முன்பள்ளிக்கான உதவி கல்வி பணிப்பாளர் எம்.எம்.சமீம்,கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத், டாக்டர் எம்.எம்.ஜிப்ரி உட்பட பெற்றார்கள் என பலர் பங்கேற்றார்கள்.
அ . அச்சுதன்