தம்கலகாம பிரதேச செயலாளர் திருமதி ஜெ. ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் நடைைபெற்ற இந்த வைபவத்தில்
சமூக சேவைகள் தினைக்களத்தினால் 04 பேருக்கு சுய தொழிலுக்கான ஏற்பாடுகளும் மேலும் 04 பேருக்கு சக்கர நாட்காலிகளும் வழங்கப்பட்டன.
பிரேண்டினா மற்றும் அல் வபா ஆகிய நிறுவனத்தினர் இணைந்து பாடசாலையில் கல்வி பயிலும் 33 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாற்றுத் திறனுடைய பெற்றோர்களின் பாடசாலை செல்லும் 05 மாணவர்களுக்கும் பாடசலை உபகரணங்களையும் வழங்கி வைத்தன. .

இந்த வைபவத்தில் மாற்றுத் திறனாளிகளின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டு அவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன..
இதன் போது இவ்வருடம் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாகாணமட்ட பரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றியீட்டியவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி
எஸ். சுதீஸ்னர், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எம். எம். அப்துல்லாஹ் , அதிபர் பீ. அப்துல் ரௌப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அ . அச்சுதன்
