கனடாவில் நிலவிவரும் கடும் குளிருடனான காலநிலை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றாரியோவில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் குளிருடனான காலநிலை தீவிரமடைந்துள்ள நிலையில், பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் பனிப்பொழிவு மற்றும் கடுமையான பனிக்கட்டி காரணமாக இருள் சூழ்ந்து குளிரான காலநிலை நீடித்து வருகிறது.
ஒட்டாவாவின் தெற்கு ப்ரூஸ் மற்றும் வடக்கு ஹுரன் மாவட்டங்களில் குறித்த பனிப்பொழிவு மற்றும் கடுமையான பனிக்கட்டி காரணமாக இருள் சூழ்ந்து குளிரான காலநிலை நீடித்து வருகிறது.
குறித்த பகுதியில் இன்று அதிகாலை 6-மணியளவில் ஏற்பட்ட குளிர்கால பதிவானது – 10C முந்தைய பதிப்பினை வீழ்ச்சியடைய செய்துள்ளது. இதன் காரணமாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் சில தினங்களுக்கு மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.





