வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென சீல் வைத்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷாலுக்கும் தயாரிப்பாளர்களின் ஒரு பகுதியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலையடுத்தே இந்த சீல் வைப்பு இடம்பெற்றுள்ளது. கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இருதரப்பிலும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தயாரிப்பாளர் சங்க அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை, சக உறுப்பினர்கள் முன்வைத்து வருகின்றனர்.
அந்தவகையில், சங்கத்தின் வங்கிக் கணக்கில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மாதந்தோறும் வெளியாவதால் சிறிய படங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் தமிழ் ரொக்கர்ஸ் இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விஷால் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகம் முன்பு திரண்ட தயாரிப்பாளர்கள், சங்கத்திற்கு பூட்டுப்போட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் சாவியை முதலமைச்சரிடம் கொடுத்து, விஷாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று விஷால், தயாரிப்பாளர் சங்கப் பூட்டை உடைக்க முற்பட்ட நிலையில் பொலிஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரும் அவரது ஆதரவாளர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
இதன்பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென சீல் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
