புல் உருகும் கல் உருகும்
புழுக்கூட தான் உருகும்
பல் மிருகம் பாம்பு உருகும்
பறவைகளும் தாம் உருகும்
பேய்கள் என்ன?கணங்கள் என்ன?
வல்லசுரர் முனிவர் என்ன?
தேவர்களும் தாம் உருக!
நாம் உருகமாட்டேமா?
தேன் ஒழுக தமிழ் சுவையில்
யாம் உருக தமிழ் சமைத்து
சிவம் மொழிந்த வாசகம்
மணிக்கவாசர் தம் திருவாசகம்
சங்கரன் ஜெய சங்கரன்
சிவனடியான்
