மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குநர் பிரியதர்ஷினி ஈடுப்பட்டுள்ளார்.இப்படத்தில் நடிகை நித்தியாமேனன் கதாநாயகியாக நடிப்பதுடன் குறித்த படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான 5 ஆம் திகதி வெளியாகியது.
அதனை தொடர்ந்து பெப்ரவரி 24 ஆம் திகதி இதன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் எம்.ஜி.ஆரின் கதாப்பாத்திரத்தில் நடிக்க மலையால நடிகர் இந்திரஜித் சுகுமாரனிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திரஜித் ஏற்கனவே தமிழில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படத்தில் நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





