
இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற பாதுகாப்பு அதிகாரிகளுடனான கூட்டு சந்திப்பில் கருத்து வௌியிட்ட அவர், இந்த நகர்வானது தனது நாடு ஒரு புதிய வகையான மூலோபாய ஆயுதத்தை கொண்டது என்று பொருள் என குறிப்பிட்டார்.
இந்த புதிய முன்நிலை ஏவுகணை சோதனைக்கு அவன்காட் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கிரெம்ளி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. புதிய ஏவுகணை முறைமையானது, மார்ச் மாதத்தில் ஜனாதிபதி புட்டினால் அறிவிக்கப்பட்ட பல புதிய ஆயுத கட்டமைப்புகளை சார்ந்ததாகும்.
இது உயர் எதிர்த்தாக்கம் கொண்டதாகவும், ஏவுகணை பாதுகாப்பு முறைகளை எளிதில் தவிர்க்கவும் அனுமதிக்கிறது. குறித்த முன்நிலை சோதனை நடவடிக்கைகளை இன்று, ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மொஸ்கோவில் உள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் கண்காணித்தார்.
இந்தநிலையில், தெற்மேற்கு ரஷ்யாவில் இருந்து சோதனைக்காக செலுத்தப்பட்ட அவன்காட் ஏவுகணை ரஷ்யாவின் தொலைத்தூர கிழக்கு எல்லையில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கியளித்ததாக கிரெம்ளி ஜனாதிபதி அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
