கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் சேவைகள் தொடர்பாக மாகாணத்தில் உள்ள அனைவரும் முறையிட்டும் கேள்வி எழுப்பியும் சேவைகளை பெற முடியும் என கிழக்கு மாகாண சமூக சேவைககள் திணைக்கள பணிப்பாளர் மதிவண்ணன் தெரிவித்தார்.
வீ எபக்ட் நிறுவனத்தின் (We Effect) நிதி அனுசனையில் இளைஞர் அபிவிருத்தி அகத்தினால் இன்று (24) திருகோணமலையில் இடம் பெற்ற மனித உரிமைகள் அரங்கில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போத இவவ்வாறு தெரிவித்தார்.
தமது திணைக்களத்தால் கிழக்கு மாகாண மட்டத்தில் வழங்கப்படும் சேவைகள் தொடரபாக ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் உள்ள சமூக சேவைகள் உத்தியோத்தரிடமும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதனடிப்படையில் பொது சன உதவித் தொகை பாரிய நோய்களுக்கான உதவு தொகை சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான மானியம் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான உதவித் திட்டம் தடப்பு மகாம்களில் இருந்து புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான உதவித் திட்டம் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றது.
இவற்றை எழுத்து மூலமாக கோருமிடத்து வெளிப்படையாக பெற்றுக் கொள்ள முடியும் என்று கிழக்கு மாகாண சமூக சேவைககள் திணைக்கள பணிப்பாளர் மதிவண்ணன் தெரிவித்தார்.
அ . அச்சுதன்





