
முன்னாள் உயர் அதிகாரியின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோசடி மற்றும் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்ட, உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சில் முன்னாள் துணை அமைச்சராக இருந்த மா ஜியான் என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மா ஜியானின் வழக்கு சீனாவில் மிகவும் தீவிரமாக தேடப்பட்டு வந்த, நியுயார்க்கிற்கு தப்பியோடிய வர்த்தக பிரமுகரான குவா வெங்குய்யின் வழக்குடன் தொடர்புபட்டுள்ளது.
இதன்படி மா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வர்த்தகரான குவாவின் சட்டவிரோத பொருட்களை கடத்தல் மற்றும் அச்சுறுத்திப் பணம்பறித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு உதவியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இதற்காக, மா ஜியான் கையூட்டல் பெற்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டு டெலியன் இடைநிலை மக்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
