
தெலங்கானா மாநிலம், நலகொண்டா பகுதியை சேர்ந்த பாஸ்டர் நாயக் என்பவர் அமெரிக்காவின் கோர்ட்டியட் தேவாலயத்தின் உதவியுடன் கிறிஸ்தவ மதபோதகராக செயல்பட்டு வருகிறார்.
இவரது பிள்ளைகளான ஆரோன் நாயக் (17), ஷரோன் நாயக் (14), ஜோய் நாயக் (15) ஆகியோர் மிசிசிபியில் உள்ள பிரெஞ்சு கேம்ப் கல்வியகத்தில் கல்விகற்று வந்தனர்.
இவர்கள் 3 பேரும் மெம்பிசில் உள்ள டென்னிஷி பகுதியில் வசிக்கும் காரி கோடிரிட் என்ற பெண்ணின் வீட்டுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட சென்றிருந்தனர்.
கடந்த சனிக்கிழமை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கிறிஸ்மஸ் அலங்கார பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இரவு 11 மணியளவில் அங்கு திடீரென தீ பரவல் ஏற்பட்டது. இதில் ஆரோன், ஷரோன், ஜோய் மற்றும் காரி கோடிரிட் ஆகிய 4 பேரும் தீக்கிரையாகி உயிரிழந்தனர்.
காரி கோடிரிட்டின் கணவர் டேனி மற்றும் அவர்களது மகன் கோல் ஆகியோர் சிறிய தீக்காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக நகர முதல்வர் ஸ்டான் ஜோய்னர் தெரிவித்தார்.
