
குறித்த இருவரும் சென்ற வாகனம் Telephone வீதி, பிஷ் மற்றும் கேம் சாலை அருகே உள்ள குழி ஒன்றில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதன் சம்பவம் குறித்து அறிந்து பிற்பகல் 6:30 மணிக்கு சம்பவ இடத்திற்கு அவசர பிரிவினர் வந்த போது காரின் கீழ் நீர்மூழ்கி கிடந்துள்ளார்.
இதன் பின்னர் குறித்த இருவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இருப்பினும் அவர்கள் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதில் உயிரிழந்தவர்கள் மத்திய ஹூரோன் பகுதியை சேர்ந்த 72 வயதான ஜோர்ஜ் ரிச் மற்றும் 69 வயதான மேரி வுட் என பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவராத நிலையில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
