
ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு அதிக வேகத்தில் பாய்ந்து செல்லும் ஹைப்பர் சொனிக் ஏவுகணை, நவீன ஏவுகணை பாதுகாப்பு முறையை உடைக்கும் திறன்கொண்டது.
காம்சட்கா பகுதியில் இடம்பெற்ற இந்த ஏவுகணை இறுதிக்கட்ட சோதனையின் போது ரஷ்ய ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இதனை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து கிரெம்ளினில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“தென் கிழக்கு ரஷ்யாவில் உள்ள ஒரு இடத்திலிருந்து ஏவப்பட்ட குறித்த ஏவுகணை ரஷ்யாவின் கிழக்கில் ஒரு இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்துவிட்டது.
தமது உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சு இந்த சோதனையை செய்ததாகவும், அது முழுவெற்றி அடைந்துள்ளதாகவும்” ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
