எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு தொடர்பான அரசாணை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஜனவரி 15 ஆம் திகதி மதுரை – அவனியாபுரத்திலும், ஜனவரி 16 ஆம் திகதி பாலமேட்டிலும், ஜனவரி 17ஆம் திகதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.
குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படுகிறது.
