
இரண்டாவது வாக்கெடுப்பு பிரித்தானிய மக்களின் விசுவாசத்தை உடைக்கும் செயலாக அமையுமெனவும் அரசியலுக்கு சேதம் விளைவிக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொடரும் சர்ச்சைகளையடுத்து பல அரசியல் பிரமுகர்கள் பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.
ஆனால் பிரதமரும் அவருடைய அமைச்சர்களும் இரண்டாவது வாக்கெடுப்பை நிராகரித்துள்ளனர். முதலாவது வாக்கெடுப்பின்போது பிரெக்ஸிற்றுக்கு ஆதரவாக வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாக இது அமையுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மற்றொரு வாக்கெடுப்பு நடத்த முயலுவதன் மூலம் பிரித்தானிய மக்களின் நம்பிக்கையை உடைக்க மாட்டோம் என பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் உறுதியாக கூறுவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது வாக்கெடுப்பு தமது அரசியலின் நேர்மையை சேதப்படுத்துமெனவும் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இல்லாதொழிக்குமெனவும் அவர் தெரிவிக்கவுள்ளார்.
கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸ்க்கு பயணம்செய்து ஐரோப்பிய தலைவர்களை சந்தித்ததன் பின்னர் இன்றையதினம் பிரதமர் தெரேசா மே பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு திரும்பவுள்ளார்.
