வின்னிபெக் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதில் ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வின்னிபெக் டுச்சர்மே அவென்யூ பகுதியில் அமைந்துள்ள பிரெம்பினா நெடுஞ்சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒரு காரில் பயணித்த ஐந்து பேருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்த மேலதிக தகவல் எதனையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை. எனினும் இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





