கிழக்கு மாகாண கிராம சக்தி வேலைத் திட்டத்தின் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கான மீளாய்வு கூட்டம் இன்று (10) திங்கட் கிழமை திருகோணணலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலகத்தில் ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையில் இடம் பெற்றது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிராம சக்தி வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் குறித்த வேலைத் திட்டங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.
(அ . அச்சுதன்)







