முல்லைத்தீவு ,கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மையில்
ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உலர்வுணவு
பொருட்கள் சேகரிக்கும் பணிகள் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இந்த நிவாரண பொருட்களை சேகரிப்பதற்கான நிலையம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில்
திறந்து வைக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்
தலைமையில் நிவாரண பொருட்களை சேகரிப்பதற்கான
நிலையம் திறந்து வைக்கப்பட்டு பொருட்கள் சேகரிக்கும் பணிகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இந்த நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணியினை
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் , மாவட்ட செயலகம் மற்றும்
மட்டக்களப்பு மாநகர சபை, மாநகர சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு வர்த்தக சங்கம்
,மட்டக்களப்பு இளைஞர் அமைப்புக்கள் , அரச சார்பற்ற நிறுவனங்கள் ,சிவில் அமைப்புக்கள்
ஆகியன இணைந்து இந்த நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்
.
