முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்றுவருகிறது.
கொழும்பு – விஜயராம மாவத்தை, முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட தரப்பினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.





