LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, December 8, 2018

பலமும், பலயீனமும் 1 - 39


அனைத்து வல்லமையும் கொண்ட வல்ல தேவனிடமிருந்து வந்தவர்கள்தான் நாங்கள். அவர் சாயலிலே படைக்கப்பட்டவர்கள் தான் நாங்கள். ஆனாலும் நம்மில் குறைகள் உண்டு! கடவுள் பலமுள்ளவர். ஆனால் அவரிடமிருந்து வந்த நாமோ பலயீனர்களாக இருக்கின்றோம். சமாதானத்தின் தேவன் அவர். ஆனாலும் அவரால் உருவாக்கப்பட்ட நம்மிடம் மன அமைதியுமில்லை, சமாதானமும் இல்லை. நாம் முற்றிலும் பலயீனர்களில்லை. நம்மில் பலம் இருக்கிறது, ஆனாலும் அதை விடவும் பலயீனங்களே நம்மில் அதிகம் இருக்கின்றது. ஆற்றலின் ஊற்று அவர். இருந்தும் எம்மில் நாம் விரும்பிய ஒரு சில ஆற்றல்கள் தவிர வேறெதையும் நம்மால் உருவாக்கிக் கொள்ள முடிவதில்லை.
பசு மிகவும் சாதுவானதுதான். பலயீனமானதுதான். ஆனாலும் தன் கன்றுக்கு ஒரு ஆபத்து என்று வந்துவிட்டால் காடே கொள்ள முடியாத அளவுக்கு அது மிரண்டெழுகிறது. பலம் மிக்க சிங்கம் புலிகளோடு ஒத்தைக்கொத்தியாக நின்று போராடவும் அது தயங்குவதில்லை. தாய்மை எவ்வளவுதான் பலயீனமாக இருந்தாலும் தன் மகவுக்கொரு சோதனை என்றால் தனக்கு வரக்கூடிய வேதனையை அது பொருட்டாகக் கொள்ளுவதில்லை. தான் பலயீனமானது என்று கூட மனதில் எண்ணிக் கொள்வதில்லை. ஆபத்துக்களை ஒரு கை பார்க்க அது முனைகிறதா இல்லையா?
நாம் பலயீனமானது என்று கருதி பரிதாபம் காட்டுகின்ற ஒன்று நாம் நினைத்திராத பணியில் துணிந்து இறங்குகின்றபொழுது அதையிட்டு நாம் ஆச்சரியம் கொள்ளுகின்றோம். நாம் கனவிலும் எதிர்பாராத ஒன்று நிறைவேறுவது கண்டு நாம் வியந்து மலைத்துப் போகின்றோம். அதைச் சாதாரணமாக எண்ணியிருந்த நாம் அதைக் கண்டாலே மரியாதை கொடுத்து நடந்து கொள்வதுண்டு. மனிதரைப் பொறுத்த மட்டிலும் நாம் இவ்வாறுதான் நடந்து கொள்கின்றோம். பலயீனமானவன் என்று நாம் எண்ணியிருக்கின்றவர்கள் பலத்தோடு நிமிர்ந்து நிற்பது கண்டு சமயங்களில் நாமே வாலைச் சுருட்டிக் கொண்டு நகர்ந்து விடுவதும் உண்டு இல்லையா?
உரிய வேளையில் வெளிவரும்படிக்கு பலயீனத்துக்குள்ளே தன் பலத்தை வைப்பதுதான் இறைவனின் திருவிளையாடல். பலயீனத்தினூடே தனது பலத்தை வெளிப்படுத்தி நிற்கின்றார் இறைவன். இறைவனின் பலம் தேவையின்போது வெளிப்படுவதை கடவுள் நிச்சயப்படுத்துகின்றார். இயேசு மனிதனாக வாழ்ந்த வரையில் பலயீனனாகத்தான் இருந்தார். பல இடங்களில் தன்னை எதிர்த்தவர்களுடன் மோதாது தவிர்த்துச் செல்வதை அவரது வாழ்வில் நாம் காண்கின்றோம். கடைசி வேளையில் கூட மனித பலயீனத்தோடுதான் அவர் சிலுவையைத் தோள் மீது ஏற்று கல்வாரி வழி சென்றார். ஆனாலும் அந்தப் பலயீனத்தூடே தன் பலத்தையும் அவர் நிரூபிக்கின்றார். மனித மீட்பை அவர் பெற்றுக் கொடுக்கின்றார். அதிகாரத்திற்குப் பயந்து, உயிருக்கு அஞ்சி சீடர்கள் ஒதுங்கியிருந்தபோதும், தனியொரு மனிதனாக அவர் மீட்பின் வரலாற்றை வெற்றியாக எழுதி முடிக்கின்றார்.
பவுலடியான் தான் வல்லமை கொண்டவன், அதிகாரமுள்ளவன், ஆற்றல் மிக்கவன் என்ற மமதையோடு கிறீஸ்தவர்களை அழித்தொழிக்கப் பறப்பட்டவர்தான். ஆனாலும் அவர் பாதையில் இறைவனின் பலம் குறுக்கறுத்து சவுல் என்கின்ற யூதனை விடவும் இறைவன் தானே பலம் பொருந்தியவர் என்று காட்டுகின்றார். அது மட்டுமல்ல, பின்னாட்களில் பவுல்  தன் அறிவாற்றலைக் கொண்டு இறைமகன் கிறிஸ்துதான் உண்மையானவர் என்று மக்கள் மனதில் நம்பிக்கை ஊட்டி நின்றபோது கொரிந்தியருக்கான அவரது இரண்டாவது திருமடலில் அவராகவே குறிப்பிடும்படியாக அவர் உடலில் ஒரு உபாதை, முள் குத்துவதுபோன்று அவரை வாட்டத் தொடங்குகின்றது. அதை, தன்னில் இறை வெளிப்பாடு இருப்பதால் அது குறித்து தான் பெருமை கொள்ளாது இருக்கவே தனக்கு தரப்பட்டிருக்கின்றது என்று நினைத்துக் கொண்டிருந்த அவர், இறைவனிடம் மூன்று தடவைகள் எடுத்துச் சொல்லி தன்னை அதிலிருந்து விடுவித்து விடும்படி மன்றாடுகின்றார்.
 (தொடரும்)

ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்



















 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7