நதியொன்றை
காட்டு மரங்களில் இருந்து
கீழே விழுந்த
இலைகள் சில சுமந்து வந்தன
அப்போதெல்லாம்
நதியின் சலசலப்பை
யாரும் அழைத்து ரசிப்பது போல் இல்லை
அங்கு வந்த
பறவைகள் சில
நதியின் சலசலப்பை கொத்திச் சென்றன
அத்தோடு
நதியிலிருந்து சலசலப்பு கழன்றிந்தது
அதனால்
நதியின் அழகு வெளியேறியது
காகங்களும் குரங்குகளும்
நதியில் குளிப்பதை நிறுத்தின
ஒரு நாள் நதியின் மேலால்
பறந்து சென்ற
பறவைகளின் இறகுகள் சில
நதியில் விழுந்தன
அன்று முதல்
நதியின் சலசலப்பு கனவுக்குளிருந்து வெளியே வந்து
காட்டு மரங்களின் இலைகளில் அமர்ந்து கொண்டது.
ஏ.நஸ்புள்ளாஹ்
