LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, December 8, 2018

மட்டு வாவியில் ஆறு மில்லியன் இறால் குஞ்சுகள் விடும் நடவடிக்கை


ஆறு மில்லியன் இறால் குஞ்சுகள் மட்டக்களப்பு வாவியில் விடுவிக்கும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் திணைக்களம் ஆரம்பித்துள்ளது


மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  வாவி மீன்பிடி தொழில் ஈடுபடும் 11 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வாழ்வாதார திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .

மட்டக்களப்பு வாவிக்கு உரித்தான நீர்வாழ் உயிரினங்களை கண்டறிந்து அதனை அதிகரிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்கப்பட்டுள்ளன

இதன்கீழ் ஆறு மில்லியன் இறால் குஞ்சுகள் மட்டக்களப்பு வாவியில் விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்சான் குருஸ் தலைமையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் வாவி பகுதியில்  முதல் கட்ட இறால் குஞ்சுகளை விடுவிக்கும் நடவடிக்கைள் (07)  முன்னெடுக்கப்பட்டன

இந்த முதல் கட்ட நடவடிக்கையில் அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் கலந்துகொண்டு இறால் குஞ்சுகளை வாவியில் விடுவித்து ஆரம்பித்து வைத்தார்








 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7