மட்டக்களப்பு மாவட்டத்தில் சோளப் பயிர்செய்கையில் படைப்புழு தாக்கத்தால் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான அறிவூட்டல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
மத்தி வலய காஞ்சிரங்குடா விவசாய போதனாசிரியர் பிரிவில் சோளச்
செய்கையில் படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு அறிவூட்டல்
நிகழ்வு காஞ்சிரங்குடா விவசாய போதனாசிரியர் பிரிவில் இன்று நடைபெற்றது
மட்டக்களப்பு காஞ்சிரங்குடா விவசாய போதனாசிரியர் பி .சகாப்தன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு
விவசாய திணைக்கள பிரதி விவசாய பணிப்பாளர் வி பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற
ஒருங்கிணைப்பு அறிவூட்டல் நிகழ்வில் படைப்புழுவின் தாக்கம் மற்றும்
கட்டுப்படுத்தல் தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவூட்டல் வழங்கப்பட்டது
இந்த படைப்புழு தாக்கம் தொடர்பாக தெரிவிக்கையில் இலங்கையில் கண்டு
பிடிக்கப்படாத ஆக்கிரமிப்பு தடுப்பு காப்பு பீடையான இந்த அந்நிய படைப்புழுவானது சோளம் , இறுங்கு, கரும்பு நெல் , மரக்கறிகள்
,பழங்கள் , அவரைப் பயிர்கள் உட்பட நூற்றுக்கு அதிகமான பயிர்களைத் தாக்கி
அழிக்ககூடிய பீடையாகும்
இது மிக விரைவாக பெருகி பாரிய பொருளாதார சேதத்தை விளைவிக்க கூடிய பீடையாகும்
தற்போது இலங்கையில் அம்பாறை , அனுராதபுரம்
, மொனராகல குருநாகல் போன்ற பிரதேசங்களில் சோளப் பயிர்களைப் பெருமளவில் பாதித்து
வருவதாகவும் இதனை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கையினை கிழக்குமாகாண விவசாய
திணைக்களம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது
சோளச் செய்கையினை தாக்கும் படைப்புழுவின் தாக்கம் ,அதனை
கட்டுபடுபடுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான
துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது
படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு அறிவூட்டல்
நிகழ்வு பிரதம அதிகாரிகளான விவசாய ,கால்நடை ,அபிவிருத்தி ,நீர்ப்பாசன , கூட்டுறவு
,உணவு வழங்கல் விநியோக அமைச்சின் செயலாளர் கே .சிவநாதன் ,கிழக்குமாகாண விவசாய
திணைக்கள பிரதி பணிப்பாளர் ஆர் .ஹரிகரன் பத்தலகொட நெல் ஆராச்சி அபிவிருத்தி
திணைக்கள ஆராச்சியாளர் , ரோகன திலகசிறி ,மத்தி வலயம் உதவி விவசாய பணிப்பாளர் எம் எஸ் எம் . சலீம் மற்றும் விவசாய திணைகள்
அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள் , விவசாயிகள் கலந்துகொண்டனர்





