மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின்
ஏற்பாட்டில் மாவட்ட அரச திணைக்கள மற்றும்
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த குறைப்பு தொடர்பான இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு
மட்டக்களப்பில் நடைபெறுகின்றது
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச மற்றும் கிராம மட்டத்தில் அனர்த்த குறைப்பு ,அனர்த்தத்திற்கு
தயார்படுத்தல் மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை
போன்ற பணிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னாயர்த்த நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருகின்றது
இதன் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ,நீர்ப்பாசன
திணைக்களம் , அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் , கட்டிட ஆய்வு நிலையம் ,வானிலை
அவதான நிலையம் ஆகியன அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு அனர்த்தத்திற்கு முன்னர் , அனர்த்த வேலை ,
அனர்த்தத்திற்கு பின்னரான மூண்டு
கட்டங்களாக பாதிக்கப்படுகின்ற ,பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள் ,மக்களை
பாதுகாக்கின்ற செயல்பாட்டை அனர்த்த முகாமைத்துவ அமைச்சி முன்னெடுத்து வருகின்றது .
இந்த முன்னாயர்த்த நடவடிக்கைகளுக்கும் அரச திணைக்கள மற்றும் அலுவலக அதிகாரிகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளும்
நடவடிக்கைக்கான பயிற்சி செயலமர்வுகள் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன .
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கான
பயிற்சி செயலமர்வு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர்
எம் எ சி எம் .ரியாஸ் தலைமையில்
மட்டக்களப்பு மாநகர சபை பிரதான மண்டபத்தில் இன்று நடைபெறுகின்றது
இன்று ஆரம்பமான முதல் நாள் செயலமர்வில் அனர்த்த முகாமைத்துவ திணைக்கள
பயிற்சி நிலைய பணிப்பாளர் சுகத் திசாநாயக
, சமுர்த்தி திணைக்கள சிரேஷ்ட முகாமையாளர் சம்பா ஜானகி ஓபாத , மட்டக்களப்பு மாவட்ட செயலக
மேலதிக காணி அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சனி முகுந்தன் ,மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் , திருமதி . எ . பாக்கியராஜா , மாவட்ட வளிமண்டல திணைக்கள அதிகாரி சூரிய குமார்
மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி திணைக்கள
உத்தியோகத்தர்கள் , பிரதேச நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர்கள் , பிரதேச
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
