மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே
கொஸ்பல் ஆலய ஞாயிறு பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு
இன்று நடைபெற்றது
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே
கொஸ்பல் ஆலய ஞாயிறு பாடசாலை மாணவர்களின்
வருடாந்தம் ஒளிவிழா நிகழ்வு ஆலய தலைமை போதகர் அருட்திரு பி டப்ளியு . மரியதாஸ் தலைமையில்
ஆலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை மலர்மாலை அணிவித்து பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து விசேட ஜெப ஆராதனை வழிபாடுகளுடன் மாணவர்களின்
ஒளிவிழா கலை நிகழ்வுகள் ஆரம்பமானது .
ஒளிவிழா நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலக
மேலதிக காணி அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சனி முகுந்தன் மட்டக்களப்பு பிரதி பொலிஸ் அத்தியட்சகர் எல் ஆர் .குமாரசிறி , கௌரவ அதிதிகளாக கிழக்குமாகான
திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .நெடுஞ்செழியன், ,மத்திய வலைய பிரதி கல்விப்பணிப்பாளர்
கே. ஹரிஹரன் , வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் திருமதி சதாகரன் மற்றும் மட்டக்களப்பு விமானப்படை
அதிகாரி ,ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் .பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .
வருடாந்தம் நடைபெறும்
இந்த ஒளிவிழா நிகழ்வில் வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல்
உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
