
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் தலைவர் பதவி மற்றும் பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கான தேர்தல் இடம்பெற்றது.
இதில் ஆல்வார் மாவட்ட உள்ளாட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க. வெற்றி பெற்றது. அத்துடன், பில்வாரா, சுரு, டவுசா, டோல்பூர், கோடா, நகவுர், பாலி மற்றும் சிகார் உள்ளிட்ட 13 பஞ்சாயத்து ஒன்றியங்களில் பா.ஜ.க. 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதேபோல், காங்கிரஸ் கட்சி 5 பஞ்சாயத்து ஒன்றியங்களில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
