
புயல் நிவாரணப் பணிகளுக்காக, கூட்டுறவு வங்கிகள் பொதுநிதியில் இருந்து ரூ.6 கோடியை முதல்வர் கே.பழனிசாமியிடம் அமைச்சர் செல்லூர் கே.ராஜு வழங்கியுள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட் டங்கள் உட்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிக்காக தாராளமாக நிதி அளிக்க வேண் டும் என முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, பொதுமக் கள், தொழி லதிபர்கள், கல்வி நிறுவனங்கள், அரசுத்துறைகள், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது
கடந்த சில தினங்களுக்கு முன்புவரை கஜா புயல் சீரமைப்புக் காக ரூ.48 கோடியே 65 லட்சத்து 77 ஆயிரத்து 345 நிவாரணத் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று கூட்டுறவு வங்கிகளின் பொது நிதியில் இருந்து ரூ.6 கோடியை, புயல் நிவாரணத்துக்காக முதல்வர் கே.பழனிசாமியிடம் அமைச்சர் செல்லூர் கே.ராஜு வழங்கினார். உடன், துறை செயலர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு பதிவாளர் இரா.பழனிசாமி ஆகியோர் இருந்தனர்.
இதுதவிர, சவீதா பல்கலைக் கழக வேந்தர் என்.எம்.வீரையன் ரூ. 1 கோடியும், சாய் கல்வி குழுமம் சார்பில் கே.வி.ரமணி ரூ.1 கோடியும் நிவாரண நிதிக்கு வழங்கினர்.
மேலும் செட்டிநாடு குழும தலைவரும் நிர்வாக இயக்கு நருமான எம்ஏஎம்ஆர். முத்தையா முதல்வரை நேற்று சந்தித்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கினார்.
இதற்கிடையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் ரூ.10 லட்சத்து 85 ஆயிரத்து 356-க் கான காசோலையை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், அதன் மேலாண் இயக்குநர் ம.சு.சண்முகம் வழங்கினார். உடன் வீட்டுவசதித்துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந் தனர்.





