இந்த அகிலத்தின் எல்லா உயிர்களுக்கும் மூலமான விதையாகவும்
ஆதியும் அந்தமும் இல்லா நாதமும் விந்துவும் ஆன சிவன்
எங்கும் நிறைந்து எதிலும் கலந்து அருவம் உருவம் அருவுருமாகி
அகிலத்தின் அசையும் மற்றும் அசையாப்பொருட்களில் மட்டுமல்லாது கண்ணில் தெரியும் மற்றும் தெரியா பொருட்களிலும் பரப்பிரம்மமாக நிரம்பி இருப்பதனால்
சிவம் இன்றி ஒரு அணுவும் அசையாது
................ சிவம் ................
நித்தம்நினைக்கும் பக்தனுக்கு உணரும்பக்தி சிவம்
அறியத்துடிக்கும் விஞ்ஞானிக்கு காணமுடியா சிவம்
அறிந்துதெளிந்த மெய்ஞானிக்கு கண்ணில்தெரியும் சிவம்
ஆஸ்திகரென்ன நாஸ்திகரென்ன அவர் அன்பில் புரியும் சிவம்..
நானும் நீயும் ... சிவம்
மாலும் அயனும் ... சிவம்
மண்ணும் விண்ணும்... சிவம்
உந்தன் உள்ளே உயிராய் என்றும் சிவம்...
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
