பற்றிடக் கைகளும் பதித்திட பாதமும்
படைத்திட முழுதாய் மூளையும் உடனே
செப்பிட செம்மையாய் நாக்கும் நல்கினான்
கழித்துக் களிப்போம் கழிவுகள் யாவையும்
இத்தனை அற்புதம் எம்முடல் கொண்டதே
எண்ணில் தனித்துவம் சிவனே அமைத்தான்
தன்னில் உள்ளவை எம்மில் விதைத்தான்
முளைப்போம் முளைப்போம் சிவனாய் நாங்கள்
எம்மை போல பிறந்தவர் இல்லை
எம்மை போல இருப்பவர் இல்லை
இனிமேல் எவரும் ஆகிட மாட்டார்
தனித்துவம் மிக்க பிறவியை தந்த
தந்தையை எந்தையை சதாசிவன் போற்றுவோம்
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
