
கடந்த மாதம் 9ஆம் திகதி வடக்கு அட்லாண்டிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான குயானாவின் தலைநகரான ஜோர்ஜ்டவுனில் இருந்து ஏயார் ஜமைக்கா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ஜெட் ரக விமானம் 126 பயணிகளுடன் கனடாவின் ரொறன்ரோ நகரை நோக்கிச் சென்றது.
வானில் பறந்துகொண்டிருந்த சில நிமிடத்தில் இயந்திர கோளாறு உள்ளதை அறிந்த விமானி அந்த விமானம் உடனடியாக ஜோர்ஜ்டவுன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முறைப்பாட்டை போது கடுமையான அதிர்வுடன் தாறுமாறாக தரையிறங்கிய அந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வேலியை உடைத்துகொண்டு விபத்துக்குள்ளாக்கியது.
இதன்போது தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குறித்த பயணிகளின் பணமும் பொருட்களும் அகற்றப்பட்டு விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதன் பின்னர், ஒரு ஐபோன் உட்பட பல பொருட்கள் மற்றும் 1,000 அமெரிக்க டொலர் பணம், பணப்பை என்பன காணாமற்போனதாக பயணிகள் முறைப்பாடு வழங்கியிருந்தனர்.
அந்தவகையில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார், 4 பேர் இதில் தொடர்புபட்டுள்ளதை அறிந்து கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்கள் 100,000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் இவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த விபத்துக்குள்ளான விமானத்தில் 82 கனேடியர்கள் உட்பட 118 பேர் பயணம் செய்திருந்த நிலையில், கடந்த வாரமளவில் ஒருவர் உயிரிழந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
