நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினராக (MMC) முஹம்மது முஸ்தபா அப்துல் பரீட் (ஓய்வு பெற்ற அரசியல் விஞ்ஞான சிரேஷ்ட ஆசிரியர்) (16.11.2018) அன்று பதவி ஏற்றுள்ளார்.
கட்சியின் சுழற்சி முறையிலான பதவி ஏற்பு ஒழுங்கிற்கமைய, NFGGயின் அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.எம் சாபூர் (ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர் ) தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இப்பதவி ஏற்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பதவி ஏற்றுள்ள புதிய உறுப்பினரின் பணி மேலும் சிறப்பாய் அமைய மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
நாட்டின் அரசியல் சீரழிந்து சின்னாபின்னமாகியுள்ள இன்றைய நிலையில், முன்மாதிரியான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுக்க வேண்டிய கடப்பாட்டை மீளவும் வலியுறுத்துகிறோம்.
(ஏ.நஸ்புள்ளாஹ்)
