
டெய்லி டெலிகிராப் செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியொன்றின் போதே ராணுவத் தலைமை அதிகாரி ஜெனரல் மார்க் கார்லேடொன்-ஸ்மித் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.
அச்சுறுத்தல்கள் எவ்வாறானது மற்றும் ரஷ்யா தற்போது எந்த நிலைமையில் இருக்கிறது என்பது குறித்து அமைதியாக இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ரஷ்யர்கள் மற்றவர்களிடம் கண்டுபிடிக்கும் பலவீனங்களை தமது சுயநலத்திற்காக சுரண்டிக்கொள்ள முயல்கின்றனர்’ என்று அவர் குற்றம்சுமத்தினார்.
அத்துடன், சாலிஸ்பரி தாக்குதல் மற்றும் சில சைபர் தாக்குதல்கள் தொடர்பிலும் பிரித்தானியா ரஷ்யா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது.
