
வடக்கு மற்றும் தெற்கு தீவுகளே இவ்வாறு ஒன்றையொன்று நெருங்கியுள்ளன. இவற்றிற்கிடையிலான தூரம் சுமார் 35 சென்ரிமீற்றர் அளவு குறைந்துள்ளது.
அத்தோடு, நியூசிலாந்தின் தெற்கு தீவிலுள்ள நெல்சன் நகரம் 20 மல்லிமீற்றர் அளவிற்கு தாழிறங்கியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி ஏற்பட்ட குறித்த நிலநடுக்கம் வடக்கு தீவிலிருந்து தெற்கு தீவு வரை சுமார் 74 செக்கன்களுக்கு நீடித்தது.
நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. வருடமொன்றிற்கு நியூசிலாந்தின் 15,000இற்கும் அதிகமான நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன. அவற்றில் 100 தொடக்கம் 150 வரையான நிலநடுக்கங்கள் சக்திமிக்கமை என்பது குறிப்பிடத்தக்கது.
