
யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் கடற்கரைப் பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்தே இன்று(சனிக்கிழமை) இரவு விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைய, கொய்யாத் தோட்டம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த வெடிமருந்தினை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 4 கிலோ நிறையுடைய ரி.என்.ரி வெடிமருந்தினை விசேட அதிரடிப் படையினர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்கப்பட்ட வெடிமருந்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், வெடிமருந்தை யாழ்.நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
