LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 12, 2018

ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்


01.
சொல்.
பாறையில் சாய்ந்து கிடப்பதும்
மணல் வெளியில் நடந்து பார்ப்பதும் பிடிக்காது
குருவியாய் பறப்பது
நத்தையாய் நகர்வதும்
துள்ளி ஓடுகிற மான்குட்டியாய்
மாறுவதும் பிடிக்காது
மேலும் சொல்.
அந்தியில்
ஒரு குவளை காபி
அருகில் வெட்கப்படும் மெஹரூன்
பின்னிரவில் வெளிவரும்
அந்திமக் கற்பனை பிடிக்காது

ரசிக்கும்படி இல்லை இருந்தும்
சொல்.
இரவு நேர ரயில் பயணம்
ஹிட்லர் எழுதிய ஒரு புத்தகம்
வேரொன்றாய் பிரதி தரும்
காமத்துப் பால் பிடிக்காது

இன்னும்
இருக்கிறதா சொல்.
சடுதியாய் நிலைக்கண்ணாடிக்குள்
மறைந்து கொள்வது
பறவையாய் மாறி
என் அறையை விட்டும்
நகரங்களுக்கு வெளியேறுவது
பிடிக்காது.

சொல்.
எது பிடிக்கும்
ஒரு தோட்டா ஒரு துப்பாக்கி
சாலையில் சிறு நீர் கழிப்பவன்

வேறு.
ரோமம் இல்லாத தேகம்
பரட்டை தலை
கடவாய் வழிய வெற்றிலை போடும்
ஜோசியக்காரன் பிடிக்கும்

சொல்.
உலகம் அழியும்வரை
வாடகை வீட்டில் வசிப்பது
கஷ்டப் படுபவனுக்கு
கந்து வட்டிக்கு கொடுப்பது
தற்கொலை செய்யப் பிடிக்கும்

ஆஹா ..அட்டகாசம்
சொல்.
பெற்றோரை ஆசிரமத்தில் விடுவது
கூன் விழுந்த கிழட்டு வாழ்க்கை பிடிக்கும்

நீ பிடிக்கும் என்பதெல்லாம்
அதன் மையப பகுதியை
திறந்து பார்த்தால்
உனக்கு பிடிக்காது போல் தெரிகிறதே!

உனக்கு தெரிந்து
நான் என்ன செய்வது
என் வாசகனுக்குத் தெரியும்
இவன் ஒரு மாதிரியென்று

கடைசியாக
சொல்
ஏவாளின் கனி
முதலாம் பாவம் பிடிக்கும்
ஒரு முத்தத்தை நோக்கி நகர்வது
பிடிக்காது.

00

02.
என் மீதான நிறங்களை
ஒரு பறவை எடுத்துச் சென்று
நான் ஆற்ற அறையில் வைத்திருக்கிறது
அல்லது பெருங் காடொன்றில் மறைத்து வைத்திருக்கிறது
அதனால்
வர்ணங்களால் நான் கண்ட கனவுகளை
தொடங்க முடியாமல் அப்படியே வைத்திருக்கிறேன்
நம்பிக்கை தரக்கூடிய அந்நிறங்கள்
தவறிய பொம்மையென
பல பொழுதுகள அங்கேயே இருக்கின்றன
நிறங்களற்றதால்
நான் காகத்தைப் போல
கறுப்பாக இருக்கிறேன்
சில நேரம் மொழி தெரியாத சிறு குழந்தையைப் போல
அழவும் முற்படுகிறேன்
துயர் முற்றியதன் மூன்றாம் நிலையாக இருக்கக்கூடுமென
எனதறை முழுக்க பேச்சு
ஓ......
பறவையே வானத்திற்கு
அப்பாலான வெளியில்
என் நிறங்களை வைத்திருந்தாலும்
சோடி சோடியாய்
என் நகரத்திற்கு அந்நிறங்கள்
ஒரு நாள் பறந்து வரும்
பிரிந்த உருவங்கள் கிடைத்து
நான் மறுபடியும் நிறங்களுடைய
மனிதனாய் மிகத்தாமதமாயினும்
என் உரையாடலை தொடங்குவேன்.

00

03.
ஆகாயத்திலிருந்து ஒரு குரல்

சேமித்த இறகுகளின் துணையுடன்
உயர பறந்து
ஆகாயத்தை பூமிக்கு இழுத்து வருகிறேன்
ஆகாயத்திலிருந்து
ஒரு குரல்
என்னோடு பேசுகிறது
அந்தக் குரல் யாருடையது என
அறிய முனைபவர்கள்
என்னோடு பயணிக்கலாம்
பயணத்தின் போது உணவு உட்பட
தேநீர் அருந்துவதோ
சிறுநீர் கழிப்பதோ
பயணத்தின் இடைநடுவில்
வீடு திரும்புவதோ தடுக்கப்பட்டுள்ளது
சம்மதமானவர்கள்
ஆதாம் காலத்து ஆடைகளுடன் வரவேண்டும்
சேமித்த இறகுகள் இன்னும் மீதமிருக்கிறďது.

ஏ.நஸ்புள்ளாஹ்.
Attachments area


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7