LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 12, 2018

ஜமீல் கவிதைகள்


தாளில் வரையப்பட்ட கனவு
_____________________________

குடிசையில் வசித்து வரும் 
சேரிப்புறத்துச் சிறுமியாகிய எனக்குள்
எப்போதும் ஓர் கனவு வளர்ந்து வருகிறது 
அது கல் வீடுபற்றியதாக மட்டுமே இருக்கிறது 
இது எல்லா குடிசை வாசிகளுக்குமுரிய
நியாயமான கனவுதான்
எனது கனவினை உடன் நிர்மாணிப்பது
அத்தனை இலகுவான காரியமல்ல
தினசரி பொழுதை கடந்து செல்வதே
பெரும் போராட்டமாக இருக்கும் போது
இது எங்கணம் சாத்தியமாகும்
அப்பா கொத்தனாரக இருந்து
நிறைய கல் வீடுகளை
கட்டி முடித்து கல்லாய்ப் போனார்
ஆனால் எமக்கென்று
இன்னும் ஒரு செங்கல்லையேனும்
அவரால் வாங்க முடியவில்லை
ஒவ்வொரு கல்லாக சேகரம் செய்திருந்தால்
இன்னேரம் வீட்டை கட்டி முடித்திருக்கலாமென
இடைக்கிடை புலம்பி
மனதை ஆற்றுப்படுத்துகிறாள் அம்மா
எனது கனவு மாளிகையினை
சித்திரத்தில் வரைந்து
அதனை தினமும் ரசிக்கிறேன்
இரவு பெய்த அடை மழையின் தாரைகள்
கூரையி்ன் கிடுகிநூடாக நுழைந்து
தாளில் வரைந்து வைத்திருந்த
எனது மாளிகையினை
அப்படியே அடித்துச் செல்ல முனைகையில்
அதனை காப்பாற்றி புத்தக இடுக்கினுள் 
பவுத்திமாக வைத்திருக்கறேன்
இருந்தும் இன்னும் எத்தனை காலங்களுக்கு
எனது கல் வீடுபற்றியதான கனவு
தாளில் வரயப்பட்ட சித்திரமாக இருக்கும்
யாரோ ஒருத்தரின் வீட்டை கட்ட
அதிகாலையிலேயே புறப்படுகிறார் அப்பா

0
ஜமீல்


கூடு
_____

வீட்டின் வரவேற்பறையினது
சுவரிலிருக்கும் பூக்கல் இடுவலில்
கூடு பின்னத் துவங்குகிறது
புணையல் அடைக்கிலம் குருவி
அது கூடு பின்னும் அழகினை 
தினமும் தவறாது ரசித்து
வியந்து பேசுகிறாள் மனைவி
அதற்காக மின் விசிறியின்
இணைப்பினை துண்டித்து விடுகிறாள்
பதட்டமின்றி வந்து செல்வதற்காக
அனேகமான விருந்தாளிகளையும்
சிறுவர்களையும் தவிரத்து
சூழலினை நிசப்தமாக வைத்திருக்கிறாள்
இடைக்கிடை வீட்டைப் பெருக்கும்
வாருகல் தேய்ந்து போவது பற்றியும்
முறையிட்டுப் புலம்புகிறாள்
சந்திக் கடைக்காறனை
ஆத்திரம் தீர திட்டித் தீர்க்கிறாள்
இத்தனைக்கும் குருவி கூடு பின்னி
குஞ்சு பொரித்து பறக்கும் வரை
தேய்ந்து போன வாருகலின் தும்புகள்தான்
பின்னி முடித்த அழகான கூடென்று
எனதன்பு மனைவிக்கு தெரியாமல் போயிற்று

0
ஜமீல்



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7