கனிய எண்ணெய் கொண்டு செல்வதற்கு ரயில் காரினை வாங்க ஆல்பர்டா அரசாங்கம் முடிவு செய்துள்ளது என ஆல்பர்டா முதல்வர் ரேச்சல் நோட்லே தெரிவித்துள்ளார்.இது குறித்து நேற்று (புதன்கிழமை) ஒட்டாவாவில் பேசிய அவர், எண்ணெய்களை கொண்டு செல்வதற்கான குழாய் அமைப்புக்களை கட்டும் வரை குறித்த இரயில் கார்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தேரிவித்துள்ளார்.
சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதனை எடுதித்து செல்வதில் ஏற்படும் பண வீண்விரயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சேவை ஏற்கனவே நடைசிமுறையில் உள்ளதாகவும், இது 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என முதல்வர் ரேச்சல் நோட்லே தெரிவித்துள்ளார்.





