
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (NUJA-நுஜா ) விசேட கூட்டம் இன்று சாய்ந்தமருது Sea Breeze Hotel இல் நடைபெற்றது. இந் நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
நுஜா அமைப்பு ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு ஆரோக்கியமான மேம்பாட்டு திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. விரைவில் நுஜா ஊடக ஒன்றியத்தின் ஊடகவியலாளர்கள் இந்தியா பயணமாகின்றனர்.
அதற்கான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகள் இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளை பலர் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்
நுஜாவின் தவிசாளர் றியாத் ஏ.மஜீத் தலைவர் அரூஸ் சம்சுதீன், செயலாளர் பைசல் இஸ்மாயில் இன்றைய நிகழ்வை சிறப்பாய் வழி நடாத்தினர். இன்றைய நிகழ்வுக்கு தொழிலதிபர், நண்பர் பொறியியலாளர் முஹம்மத் நியாஸ் அனுசரணை வழங்கினார்.
(கிண்ணியா செய்தியாளர்)
