அதுவரையில் ஜனாதிபதியிடம் இருந்து எந்த உத்தியோகபூர்வ நிலைப்பாடும் வராது...
இன்றும் நாளையும் திங்களும் பல கட்சித்தாவல்கள் நிகழக்கூடும்....
சிறுபான்மை கட்சிகளுக்கு முக்கிய இடம் வழங்கப்பட வேண்டும் என்று இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதனால் TNA, TPA. SLMC. ACMC கட்சிகளை அழைத்து பேச மகிந்த முடிவு செய்திருக்கிறார்.
சரியான நடைமுறைகளை பின்பற்றி தமக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் பிரதமர் மகிந்த கூறி இருக்கிறார்.
சஜித் அல்லாமல் வேறொருவரை பிரதமர் ஆக்கலாமா? என்ற கருத்து ஐக்கிய தேசிய கட்சியில் முன்வைக்கப்பட்டப்போது, தமக்கான உரித்தை கேட்டு ரவி கருணாநாயக்க வாதிட்டதாக கூறப்படுகிறது.
சஜித் பிரேமதாச நிலைமையை உணர்ந்து அமைதி காப்பதாக அறியமுடிகிறது.
ரணிலை பிரதமர் பதவியில் அமர்த்த ஆதரவளிக்கலாமா என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனை நன்கு திட்டமிட்டு சுமந்திரன் காய்களை நகர்த்துவதாக கூட்டமைப்பின் தகவல்கள் கூறுகின்றன.
