
கண்டியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டுக்காக என்னுடைய உயிரைக் கொடுத்தேனும் பணியாற்றுவேன்.
தோற்கடிக்க முடியாது என்று கூறிய ஜனாதிபதியை நாம் தோற்கடித்தோம் அல்லவா?. நாம் ஒன்றுபட்டால், அனைத்தும் சாத்தியமாகும்.
நம்பிக்கையுடன் இருந்தால், அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும், ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வெற்றி பெறுவது நாம் தான்“ என தெரிவித்துள்ளார்.
