
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது சாதகமான ஊடகத் தகவல்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலேயே பிரதமர் ஊடகங்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஊடகத்துறைக்கு உதவும் வகையில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கான வரிச் சலுகைத் திட்டத்தை நிதியமைச்சர் பில் மோர்னியூ அண்மையில் அறிமுகப்படுத்தினார்.
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமையை தொடர்ந்தே பிரதமர் ட்ரூடோ அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக கொன்சவேற்றிவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ”தேர்தல் நடைபெறவுள்ள ஆண்டில் பிரதமர் தொடர்பான பாராட்டுகளையும், புகழாரங்களையும் பரப்புவதே ஊடகங்களின் பணி என பிரதமர் ட்ரூடோ எண்ணிக் கொண்டிருக்கிறார்.
ஊடகங்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக வரிச்செலுத்துவோரை இக்கட்டான நிலைக்கு தள்ளுவதற்கு பிரதமர் முயற்சித்து வருகின்றார்” எனச் சாடினார்.
