பின்னர் அவர்களது உறவு வட்டம் விரிவடைந்து கொண்டு செல்லும்போது, பலரையும் சந்திக்க நேருகின்றபோது, அவர்கள் தமக்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளுகின்றவர்கள் மாறிச் செல்லும் நிலையையும் காணமுடியும். பாடசாலைப் பருவத்தில் தமக்கு வழிகாட்டிகளாக தமது ஆசிரியர்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள முற்படுகின்றனர். மாணவர் தமக்குள் ஒரு தலைவனை மையப்படுத்தி குழுக்களாகச் சேர்ந்து செயல்பட முனைந்து விடுகிறார்கள். நல் வழி நடப்பதும் உண்டு, வழி தவறிவிடுவதும் உண்டு! விடலைப் பருவத்தில், சினிமா நடிகர்களைக் கூட தமக்கு முன்னுதாரணமாகக் கொண்டு தமது நடை உடை பாவனைகளை அமைத்துக் கொள்ளுகின்றார்கள். பெரியவர்களான பின் அலுவலகத்திலும் சரி பின்னர் பொது வாழ்விலும் சரி யாரையாவது தலைவனாக ஏற்று அவர் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதையும் நாம் காணலாம். அரசியலில் கூட தலைவர்களைத் தெரிந்தெடுத்து அவழ்களுக்காக உயிர் கொடுக்கின்றவர்களையும் நாம் கண்டு கொண்டுதான் இருக்கின்றோம். இதை மற்றவர்கள் பற்றிச் சொல்லி இனங்காட்டிக் கொள்ளத் தேவையேயில்லை – நம் ஒவ்வொருவரதும் வாழ்வின் பின்னணியும் இதுவாகத்தான் இருக்கிறது. இதிலிருந்து நமக்குள் யாரும் விதிவிலக்காகி விட முடியாது.
சில சந்தர்ப்பங்களில் சிலர் நம் வாழ்வில் தலைவர்களாக, நம்மை வழி நடத்துபவர்களாகத் தாமாக நுழைந்து கொள்வதுமுண்டு. வழி தவறுபவனை நல்வழிப்படுத்த, 'என் சொல்லை அவன் அல்லது அவள் தட்ட மாட்டாள். நான் சொல்லிப் பார்க்கின்றேன், நான் கதைத்துப் பார்க்கின்றேன்' என்று முன்வருபவர்கள் இருக்கின்றார்கள். சில வேளைகளிலபேசிப்பார்த்தால் சில சமயம் அவன் 'தீயினூடாகப் பயணிக்கும் பொன் ஜொலிப்பதுபோல துன்பமான பாதையூடாகப் பயணிக்கின்றபோது நம் வாழ்வு ஒரு அர்த்தம் கொண்டதாக மாறியமைகின்றது. ஆண்டவரின் விதி முறைகளை, வழி முறைகளை ஏற்றுக் கொண்ட தொண்டனாக எம்மை அமைத்துக் கொண்டால் மட்டுமே எம்மால் இப்படியான மகிமைக்குரிய வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டிருக்க முடியும். அப்போது தான் நாம் ஒவ்வொரு நாள் பொழுதிலும் செய்கின்ற ஒவ்வொரு பணியிலும், எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும், சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதரிலும் இறைவனின் மகத்துவத்தைக் காணவும் முடியும், அது கொண்டு வரும் வாழ்வை அனுபவிக்கவும் முடியும்.
இப்படியான ஒரு வாழ்க்கையை வாழ முற்படும்போது அதற்காக நாம் அவருக்கு நன்றி கூறும் மனிதர்களாக மாறி அமைவோம். இறைவனின் நன்மைத் தனம் நம் வாழ்வில் அள்ளித் தெளிக்கின்ற வசந்தங்களுக்காக நன்றி கூறுபவர்களாக நாம் இருப்போம் என்பது உறுதி!
ஆண்டவனின் தொண்டனாக நாம் அமைகின்ற போது நம் வாழ்வில் அவரை விட்டு விலகுதல் என்கின்ற வார்த்தைக்கே இடம் இருக்கப்போவதில்லை! நம் வாழ்வும் தடம் புரளாமல் சென்று கொண்டே இருக்கும்.
(தொடரும்)
