
ஆப்கான் இராணுவத்தளம் ஒன்றினுள் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்காக தாக்குதலுக்குள்ளானவர்கள் கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் அனைவரும் ஆப்கான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களெனவும் இராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இத்தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை.
