சுமார் மூவாயிரம் பேர் வரையில் அமெரிக்காவிற்குள் நுழைய மெக்சிகோ எல்லையிலுள்ள திஜூயானா நகரில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
மெக்சிகோ எல்லை ஊடாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் ஊடுருவி வருகின்றனர். குறிப்பாக மத்திய அமெரிக்க கண்டத்திலுள்ள ஹோண்டுராஸ், கௌத்தமலா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் நுழைகின்றனர்.
இவர்களை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இதற்கமை மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடை பெறும் நிலையில், எல்லையில் ஐய்யாயிரத்து 800 இராணுவ வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய வந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களில் மூவாயிரம் பேர் மெக்சிகோவில் அமெரிக்க எல்லையிலுள்ள திஜூயானா நகரில் காத்திருக்கின்றனர். இவர்களில் இரண்டாயிரத்து 750 க்கும் மேற்பட்டவர்கள் மெக்சிகோவில் தஞ்சம் அடைய மேயர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் 10 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவதை மெக்சிகோ தடுத்து நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி டிரம் தெரிவித்துள்ளார்.
இல்லாவிட்டால் மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடி விடுவதாகவும், மேலும் மெக்சிகோவுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்துவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
