உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி(நவம்பர்-14-2018)கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் ஆரோக்கிய வாழ்வு நிலையம் ஏற்பாடு செய்திருந்த நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைபவணி; சனிக்கிழமை(17-01-2018) கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடைபெற்றது இங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் பொதுச் சுகாதாரப் பிரிவின் கீழ் இயங்கும் ஆரோக்கிய வாழ்வுநிலையத்தின் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக்கின் நெறிப்படுத்தலில் இந்த விழிப்புணர்வு நடைபவணி நடைபெற்றது.
இந்த நடைபவணி அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பிரதான வீதி வழியாக சாய்ந்தமருது வைத்தியசாலை வரை சென்று மீண்டும் வைத்திய சாலை வளாகத்தை வந்தடைந்தது.நடைபவணியின் போது நீரிழிவுநோய் பற்றிய விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இங்கு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றகுமான் மேலும் உரையாற்றுகையில்:-உலகத்தில் நீரிழிவுநோய் அதிகரித்துக் காணப்படுகின்றது இதே போன்று எமது நாட்டிலும்இஎமது பிரதேசத்திலும்இந்த நீரிழிவு நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.இதற்கு எமது பிரதேச மக்களிகளின் உணவுப்பழக்கமும்இ வாழ்க்கை நடைமுறையூமேயாகும்.
இப்போது யாரும் நடந்து செல்வதில்லை சிறு தூரமாக இருந்தாலும் வாகனத்திலேயே பயணிக்கின்றனர்.இதனால் இந்த நோய்த்தாக்கம் அதிகரிப்பதற்கு வாய்ப்பாக இருக்கின்றது.எனவே நீரிழிவுநோயை இனங்கண்டு அதற்கு தகுந்த சிகிச்சைகள் வழங்குவதன் மூலம் அதனால் ஏற்படுகின்ற பின் விளைவுளில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடிவும்.இந்த நிகழ்வில் டாக்டர் எம்.சி.மாஹிர் உள்ளிட்ட டாக்டர்களும்,தாதி உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
(பி.எம்.எம்.ஏ.காதர்)
