LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 23, 2018

வைத்திய அத்தியட்சகர் தட்சணாமூர்த்தி விபத்தில் மரணம்!


யுத்த காலத்தில் ஆரம்பித்து இற்றைவரை மருத்துவ சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுடன் ஆன்மீக சேவையில் தன்னை அர்ப்பணித்து மானிடர்களுக்கு மகத்தான சேவையாற்றி வந்த வைத்தியக் கலாநிதி சின்னத்தம்பி தட்சணாமூர்த்தி வாகன விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிட்சைப் பிரிவில் சிகிட்சை பெற்று வந்த நிலையில் சிகிட்சை பலனின்றி இன்று (23) காலமானார்.
பழுகாமத்தை பிறப்பிடமாகக் கொண்டு கல்லடி சிவானந்தா பாடசாலையில் கல்வி கற்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் தனது பட்டப் படிப்பை நிறைவு செய்து சேவையாற்றி வந்த நிலையில் யுத்தம் மற்றும் அனர்த்தங்கள் உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டத்தில் இராணுவ மற்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை இணைக்கும் வாகரைஈ களுவாஞ்சிக்குடி மற்றும் வாழைச்சேனை உள்ளிடட் பல வைத்தியசாலைகளில் வைத்திப் பணிப்பாளராகப் பணிபுரிந்தவர்.
நான்கு பிள்ளைகளின் தந்தையாகவிருந்து வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராகப் பரிபுரிந்து வந்த நிலையிலே மரணத்தைத் தழுவிக் கொண்டார். 2010 இல் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் அமைப்பின் முக்கிய பிரதிநிதியாக ராஜஸ்தானுக்கு சென்று வந்து இதுவே வாழ்க்கைக்கான சிறந்த பாதை எனப்பரிந்து நேரம் தவறாமல் தீவிரமான தியானத்தில் ஈடுபாடு கொண்டதோடு கிழக்கின் புத்திஜீவிகளையும் மற்றும் கல்விமான்களையும் பிரம்மகுமாரிகள் ஆன்மீகப் பயணத்தில் இணைத்தவர்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு தனது உடலின் குருதிச் சுற்றோட்டத்தில் ஏற்பட்ட தடைகளை நிவர்த்திக்கும் நோக்கில் இருதய சத்திர சிகிட்சைக்குள்ளாகி சுகதேகியாக வாழ்ந்து வந்தவர். ஆன்னாரின் பூதவுடல் மட்டக்களப்பு சின்ன உப்போடையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(சிவம்)

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7