இன்று என்னவளுக்கு அறுபது வயது
இதயத்தில் இணைந்து 39 ஆண்டுகள்
இன்னல் தராது
இன்பம் தந்து மகிழ்வித்தவள்
இதயத்தால் நானே உலகமென்று நம்பியவள்
இறுமாப்பு இல்லாத இல்லத்தரசி.
வலிகளைச் சுமந்து நாளும்
வாழ்தலைப் புரிந்து நின்று
புரிதலில் வாழ்பவள் என்னவள்
வறுமையின் வறட்சியில்
பொறுமையை நீராக்கி வாழ்வில்
வசந்தத்தைத் தந்தவள்.
அன்பே அவள் ஆயுதம்
அருமையே அவள் பொக்கிஷம்
புன்னகையே அவள் கவர்ச்சி
உண்மையே அவள் பலம்
மேன்மையே அவள் வார்த்தைகள்
ஆனந்தமே அவள் அரவணைப்பு.
என் எழுத்துக்கு உயிரூட்டியவள்
நான் பெற்ற விருதுகளுக்கு
அவள்தான் சொந்தக்காறி
என் உயர்வில் அவளே ஏணி
எனக்குள் அவளும்; அவளுக்குள் நானும்;
இன்றும் ஆனந்தமாய் வாழ்கின்றோம்.
-பி.எம்.எம்.ஏ.காதர்-
