வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் வழிகாட்டலில், கல்குடா கிராம சேவை அதிகாரி க.கிருஸ்ணகாந்த் நெறிப்படுத்தலின் கீழ் வாழைச்சேனை பிரதேச செயலக கரையோரம் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.ஏ.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது.
இச்சிரமதான பணியில் பாசிக்குடா சுற்றுலாத்துறை முகாமையாளர் எஸ்.மாஹீர், வாழைச்சேனை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.பாஸ்கரன்,செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள், பாசிக்குடா ஹோட்டல் ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
பாசிக்குடா கடற்கரையை பிளாஸ்டிக், பொலித்தீன் அற்ற பிரதேசமாக மாற்றி உல்லாச பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கிலும், அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக அதிக கழிவுப் பொருட்கள் கடற்கரையில் உள்ளதால் சூழல் மாசுபடும் நிலையிலும் குறித்த சிரமதானம் இடம்பெற்றதாக கரையோரம் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.ஏ.பைறூஸ் தெரிவித்தார்.





